TamilsGuide

எண்டி பர்ன்ஹாம் பிரித்தானியாவின் 59ஆவது பிரதமரானார்

பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக எண்டி பர்ன்ஹாம் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பின் போது, புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு மன்னர் சார்ள்ஸ் III கேட்டுக்கொண்டார்.

எண்டி பர்ன்ஹாம் பிரதமராக நியமிக்கப்பட்டதை உறுதிபடுத்தி பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்,

"மன்னர், கௌரவத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் எண்டி பர்ன்ஹாமைச் சந்தித்து, புதிய நிர்வாகத்தை அமைக்குமாறு கோரினார்.

மன்னரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட எண்டி பர்ன்ஹாம், பிரதமர் மற்றும் திறைசேரியின் முதல் பிரபுவாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ' மன்னரின் கையை முத்தமிடும்' (Kissed hands) மரபுச் சடங்கை நிறைவு செய்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரண்மனை அறிக்கையில் பர்ன்ஹாம் மன்னரின் "கைகளை முத்தமிட்டார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர்கள் இருவரும் உண்மையில் கைகுலுக்கிக் கொண்டதாகவே கருதப்படுகிறது.
 

Leave a comment

Comment