TamilsGuide

அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களையும் சோதனை மேற்கொள்ளத் தீர்மானம்

பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் நிலை குறித்த சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை  தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இந்த செயல்முறையை முறையாக செயல்படுத்த எதிர்பார்ப்பதாக சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன குறிப்பிட்டார்.

நாட்டில் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகளுக்கு சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் வாகனங்களில் உள்ள பல்வேறு குறைபாடுகளே முக்கிய காரணங்கள்.

இதைக் கருத்தில் கொண்டு, பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களின் தற்போதைய நிலை குறித்து சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலை சோதனைப் பணிகளை மேற்கொள்வதற்குத் தகுதியான தொழில்நுட்ப அதிகாரிகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பணிகளுக்கான தொடர்புடைய ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர், செப்டம்பர் மாத இறுதிக்குள் இப்பணி ஆரம்பிக்கப்படும்.

அத்துடன், நாட்டின் அனைத்துப் பொதுப் போக்குவரத்து வாகனங்களின் நிலை குறித்த சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மஞ்சுள குலரத்ன குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment