• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரத்மலான பொருளாதார மையம் அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

இலங்கை

இன்று காலை (19) ரத்மலான பொருளாதார மையம் அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. 

அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெஹிவலா தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

தீயை அணைப்பதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெஹிவல தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
 

Leave a Reply