TamilsGuide

2 நாட்களில் அன்பே டயானா திரைப்படம் செய்துள்ள வசூல்.. 

கடந்த 2024-ஆம் ஆண்டு வெளிவந்து தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் ஜமா. இப்படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்திருந்தார் பாரி இளவழகன்.

இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம்தான் அன்பே டயானா. காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த 17-ஆம் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தில் ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், செல் முருகன், பரிதாபங்கள் கோபி என பலரும் நடித்துள்ளனர்.

ரசிகர்களிடையே இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், 2 நாட்களில் அன்பே டயானா திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 2 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 1.7 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a comment

Comment