எப்படி ஒரு தலைமை தொண்டர்களுடன் நெருக்கமாக இருந்தாரோ , அதேபோல பொதுமக்களுடன் நெருக்கமாக மனுவை வாங்குவதும் தனது வீட்டிலும் , தலைமை செயலகத்திலும் இறுதிவரை அப்படியே இருந்தார் புரட்சித்தலைவர்
அப்படி தலைமை செயலகத்தில் பொதுமக்களிடம் மனு வாங்கியபோது அந்த கூட்டத்தில் நானும் எனது வேலைவாய்ப்புக்காக 1987 இல் வரிசையில் நின்று புரட்சித்தலைவர் கையில் எனது மனுவை கொடுத்தேன்
முகமா அல்லது பளிங்கு கல்லில் செய்யப்பட்ட கண்ணாடியா ? கைகளா .. இல்லை ரோஸ் கலரா , அல்லது சிகப்பா .. அல்லது மஞ்சள் நதியில் பூசி மெழுகப்பட்ட உடலா ..? எப்படி சிந்தித்து பார்த்தாலும் அந்த கலர் உடல் இன்னமும் அந்த முகம் மறையவே இல்லை ............
இன்று மறைந்து 40 வருடங்கள் ஆனாலும் , அவர் பெயர் சொல்லாமல் இன்னும் யாராலும் தனியாக அரசியல் செய்யமுடியவில்லை
அதெல்லாம் ஒரு காலம் ...!
உடைந்த கண்ணாடியும்
கடந்த காலமும் திரும்ப வரவே வராது.
Abdul Salam


TamilsGuide
தனது கட்சி தொண்டர்களுடன் புரட்சித்தலைவர் மனம்விட்டு உரையாடும் காட்சி
