பிரிட்டனில் தொழிலாளர் கட்சி யைச் சேர்ந்த கெய்ர் ஸ்டார்மர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக கடந்த மாதம் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து பிரிட்டனின் தொழிலாளர் கட்சித் தலைவராக கட்சியின் மூத்த தலைவர் ஆன்டி புர்ன்ஹாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவரே பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவர் வரும் திங்கட்கிழமை (ஜூலை 20) பதவியேற்கவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆன்டி புர்ன்ஹாம் ஏற்கெனவே கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக பணியாற்றியவர்.
இதுகுறித்து ஆன்டி புர்ன்ஹாம் பேசும்போது, ‘‘பொருளாதார வளர்ச்சி, பொதுச் சேவைகளை வலுப்படுத்த, பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் களைய நான் பாடுபடுவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.


