TamilsGuide

தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் - ஓபனாக கூறிய ப்ரீத்தி முகுந்தன்

ஸ்டார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை ப்ரீத்தி முகுந்தன்.

முதல் படத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நாக்ஜில்லா, கண்ணப்பா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு ப்ரீத்தி முகுந்தன் நடித்த பிளாஸ்ட் திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தனும் சண்டைக் காட்சிகளில் அருமையாக நடித்திருந்தார்.

கடைசியாக அதர்வா நடிப்பில் வெளியான இதயம் முரளி படத்திலும் ப்ரீத்தி முகுந்தன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், படமும் செம ஹிட்டாகியுள்ளது.

சமீபத்தில் நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஒரு பேட்டியில் தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதில் அவர் எனது வருங்கால துணையிடம் அதிகம் எதிர்ப்பார்ப்பது அக்கறைதான். என்னுடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்துகொள்ளக்கூடிய நபரே எனது வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என்கிறார்.
 

Leave a comment

Comment