• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சி பரந்தனில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீட்டுக்கு இன்று அடிக்கல் நாட்டி வைப்பு

இலங்கை

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் கிராமத்தில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீடு ஒன்றிற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (18) நடைபெற்றது. GeographicReference

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 704 பயனாளிகளுக்கான வீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

இதில் பரந்தன் கிராம அலுவலர் பிரிவில் மாத்திரம் சுமார் 52 வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன், பகுதியளவில் சேதமடைந்த 15 வீடுகளைப் புனரமைப்பதற்கான தலா 5 இலட்சம் ரூபாய் நிதியில் கீழ் உள்ளவர்கள் தொடர்பாக பயனாளிகளுக்கு வீட்டுத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று பரந்தன் கிராம அலுவலர் அலுவலகத்தில் பயனாளிகள் பங்கேற்புடன் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து, பரந்தன் பகுதியைச் சேர்ந்த பயனாளி ஒருவரது புதிய இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட பிருந்தாகரன் கண்டாவளை பிரதேச செயலாளர், கீளின் சிறிலங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருங்கன் மோகன், மாவட்ட அபிவிருத்திக்குழு தலைமையின் ஒருங்கிணைப்பாளர் சுஜிபன், பரந்தன் கிராம அலுவலர் அஜித் இவர்களுடன் வீட்டுத்திட்ட பயனாளிகள் மற்றும் கிராம மக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply