TamilsGuide

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு

டெங்கு நோய் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மாத்திரம் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அதனுடன் ஒட்டுமொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 75,000 ஐ நெருங்கியுள்ளது.

அவ்வறிக்கையின் பிரகாரம், நேற்று  வரையான காலப்பகுதியில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 74,478 ஆக அதிகரித்துள்ளது.

அவற்றுள் ஜூலை மாதத்தின் கடந்த 17 நாட்களுக்குள் மாத்திரம் பதிவாகியுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 19,100 ஆகும்.

தொடர்ந்தும் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகி வருவதுடன், அவற்றுள் அதிகளவானோர் பதிவாகும் கம்பஹா மாவட்டத்தில் தற்போது நோயாளர்களின் எண்ணிக்கை 15,596 ஆக உயர்ந்துள்ளது.
 

Leave a comment

Comment