TamilsGuide

ஒன்டாரியோவில் வானம் மஞ்சள் நிறமாகவும், சூரியன் சிவப்பு வட்டமாகவும் தோன்றியது

2026 ஜூலை 15 அன்று ஒன்டாரியோவில் வானம் மஞ்சள் நிறமாகவும், சூரியன் சிவப்பு வட்டமாகவும் தோன்றியது. இதற்குக் காரணம் சூரியனில் ஏற்பட்ட மாற்றமல்ல; கனடாவின் பல பகுதிகளில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயால் வளிமண்டலத்தில் பரவிய புகைத் துகள்களே.

இந்தப் புகை, சூரிய ஒளியின் நீல நிறக் கதிர்களை அதிகமாகச் சிதறடித்து, சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஒளியை மட்டுமே நம் கண்களுக்கு அதிகமாகக் காட்டியது. இதனால் வானம் மஞ்சள் நிறமாகவும், சூரியன் சிவப்பாகவும் காட்சியளித்தது.

இந்தக் காட்டுத்தீ கனடா மட்டுமல்லாமல் அமெரிக்காவின் சில பகுதிகளையும் பாதித்து, காற்றின் தரத்தை மிகவும் மோசமாக்கியது. இதனால் தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், ஆஸ்துமா மற்றும் இதய நோயாளிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

குறிப்பாக 
“சிகப்புச் சூரியன் என்பது சூரியனின் மாற்றமல்ல காட்டுத்தீயின் புகை வளிமண்டலத்தில் ஏற்படுத்திய ஒளிச் சிதறலால்  ஏற்பட்ட இயற்கை நிகழ்வே ஆகும்.” 
 

Leave a comment

Comment