வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் ஏறக்குறைய 150 KM தூரத்தில் உள்ளது. வவுனியாவிலிருந்து திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயம் ஏறத்தாழ 75 KM தூரத்திலுள்ளது.
அதாவது முறிகண்டி வவுனியாவுக்கும் யாழ் நகருக்கும் இடையே ஏறக்குறைய மத்தியில் அமைந்த பிரதேசத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
இங்கு பிள்ளையார் வழித்துணைப் பிள்ளையாராக வீற்றிருக்கிறார். இவ்வாலயத்தைக் கடந்தே, வடபகுதியை அடைய முடியும். எனவே, இவ்வீதியினூடாகப் பயணிக்கும் பயணிகள், இவ்வாலயத்தில் தரித்து நின்று, பிள்ளையாரை வழிபட்ட பின்னரே, தம் பயணத்தைத் தொடருவர்.
மிகச் சிறிய ஆலயத்தில் குடி கொண்டிருக்கும் இவ் விநாயகரின் மகிமையோ பெரிது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி மிக்கவர். பொங்கல், சோறூட்டல் போன்ற சடங்குகளும் இங்கு நடைபெறுவதுண்டு.
அன்று தொட்டு இன்று வரை சிறியதொரு குடிலினுள்ளேயே முறிகண்டிப்பிள்ளையார் அமர்ந்துள்ளார். மூன்று வேளை பூசைகள் நடைபெறுகின்றன.
Babu Babugi


