TamilsGuide

பல திரைக்கலைஞர்களை சாதனையாளர்களை உருவாக்கிய தளம்--மாடர்ன் தியேட்டர்ஸ்

மாடர்ன் தியேட்டர்ஸ் சேலத்தில் 1935ம் ஆண்டு டி ஆர் சுந்தரம் அவர்களால் தொடங்கப்பட்டது. முதல் படம் சதி அகல்யா அதே ஆண்டில் வெளிவந்த இந்தியாவின் முதல் பேசும் படம். அன்று ஆரம்பித்த பயணம் 1984 வரை சிறப்பாக தொடர்ந்தது.
* சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் கதை, வசனம் எழுதுபவராக சேர்ந்தார். 
மாடர்ன் தியேட்டர்ஸார் நடத்தி வந்த “சண்டமாருதம்” பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்து வந்து போது, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகவிலும் கண்ணதாசன் இடம் பெற்றார்.
1952ல் வெளிவந்த மந்திரிகுமாரி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படம். இதில் முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர் கருணாநிதி வி என் ஜானகி பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு சர்வாதிகாரி அலிபாபாவும் 40 திருடர்களும், பொன்முடி போன்ற வெற்றி படங்கள் வெளிவந்தன. டி ஆர் சுந்தரம் அவர்கள் சகுந்தலாவுக்கு

சி ஐ டி சங்கர் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தில் நடித்ததினால் அவர் சி ஐ டி சகுந்தலா என்று அழைக்கப்பட்டார்.
எம் ஜி ஆர் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் ஜெய்சங்கர் முத்துராமன் சாவித்ரி ஆச்சி மனோரமா போன்ற எண்ணற்ற நட்சத்திரங்களை திரைவானில் ஜொலிக்கவிட்ட பெருமை இந்த தியேட்டருக்கு உண்டு.
இப்படி பல பெருமைகளை கொண்ட மார்டன் தியேட்டரஸ் தற்போது முகப்பு எழுத்தில் மட்டும்தான் உள்ளது.
மறக்க முடியாத மாடர்ன் தியேட்டர்ஸ்! 
 

 

Leave a comment

Comment