• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரைப்பட  இயக்குனரும் தயாரிப்பாளருமான பிரபல மொடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் TR.சுந்தரம் 

சினிமா

தென்னிந்திய தமிழ் திரையுலகின்  பழம்பெரும் திரைப்பட  இயக்குனரும் தயாரிப்பாளருமான பிரபல மொடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் #TR_சுந்தரம் அவர்களின் பிறந்ததினம் .

பிறப்பு 16 ஜூலை 1907 /      இறப்பு  30 ஆகஸ்ட் 1963

டி ஆர் சுந்தரம்    (1907–1963) ஒரு புகழ்பெற்ற இந்திய திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து, தென்னிந்தியத் திரையுலகிற்குப் பல புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவந்த முன்னோடியாகத் திகழ்ந்தார்.மாடர்ன் தியேட்டர்ஸ்1935-ஆம் ஆண்டில் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை டி.ஆர். சுந்தரம் நிறுவினார். இதுவே தென்னிந்தியாவில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய அதிநவீன திரைப்படக் கூடமாகும். ஹாலிவுட் படங்களின் தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியதில் இவருக்குப் பெரும் பங்குண்டு.
இவரின் குறிப்பிடத்தக்க சாதனைகள்.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனமே தமிழ்த் திரைப்பட நிறுவனங்களுள் முதன் முதலில் 1960 களிலேயே 100 படங்களுக்கு மேல் எடுத்த நிறுவனம் ஆகும்.
மலையாள மொழியில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமான (பாலன் 1938) என்ற படத்தை உருவாக்கினார்.
முதல் சிங்களப் படத்தை எடுத்தது இவரே.
தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலத் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்சும் அமெரிக்க திரைப்பட நிறுவனமும் இணைந்து 1952ஆம் ஆண்டில் முதல் ஆங்கிலத் திரைப்படத்தை - தி ஜங்கிள் என்ற பெயரில் தயாரித்தனர்.
1940 இல் முதல் தமிழ் இரட்டை வேடம் திரைப்படமான உத்தம புத்திரன் என்ற படத்தை இயக்கித் தயாரித்தார்.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற தமிழில் வெளியான முதல் வண்ணத் திரைப்படத்தை 1956-இல் இயக்கித் தயாரித்தார். இதை மலையாளத்தில் ”கண்டம் வெச்ச கொட்டு” (1961) என்ற பெயரிலும் தயாரித்தார்.
எம். என். நம்பியார் பத்து வேடங்களில் நடித்த திகம்பர சாமியார் படத்தை இயக்கி, தயாரித்தார்.
சுந்தரம் தயாரித்த நாம தேவர் என்ற படம் தமிழில் வெளியான 100ஆவது படம் என்ற பெருமையைப் பெற்றது.
இந்தியாவில் வெளிவந்த முதல் அறிவியல் புனைகதை தொடர்புடைய படமான Trip To Moon என்ற படத்தை இவர் இயக்கினார்.
அக்காலத் தமிழ்த் திரையுலகில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தவர் T.R.சுந்தரம் அவர்கள்

Senthil Nathan
 

Leave a Reply