TamilsGuide

வனவள திணைக்களத்திடம் உள்ள பொது மக்களின் காணிகளை உரிய அமைச்சுக்கு பரிந்துரை செய்யும் உபகுழு கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் உள்ள பொது மக்களின் காணிகளை உரிய அமைச்சுக்கு பரிந்துரை செய்யும் உபகுழு நேற்று கூடியது.

மாவட்ட மட்டத்தில் வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் உள்ள பொதுமக்களின் காணிகளை அடையாளப்படுத்தி தொடர்ச்சியான அதன் முன்னேற்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் முகமாக மாவட்ட மட்டத்தில் மாவட்ட அரசாங்கதிபர் தலைமையில் உப குழு அமைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் மாவட்ட உப குழு நேற்று கூடியது.

இதன்போது குறித்த காணிகளின் தற்போதைய நிலைதொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு பரிந்துரைகளை உரிய அமைச்சுக்கு அனுப்பப்படவுள்ளது.

குறித்த உபகுழுவில் மாவட்ட மேலதிக அரசாங்கதிபர்  அஜிதா பிரதீபன்,வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள மாவட்ட உதவிப்பணிப்பாளர்கள் ,மாவட்ட மட்ட காணி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 

Leave a comment

Comment