TamilsGuide

அமெரிக்காவில் ஜெயலலிதாவின் Amma Kitchen - இந்தியர்கள் குதூகலம்

தமிழகத்தின் முன்னாள் முதலமச்சர் ஜெயலலிதாவின் ஆதரவாளர் ஒருவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் Amma Kitchen என்கிற பெயரில் ஒரு உணவகத்தை தொடங்கியிருக்கிறார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் முக்கியமானது அம்மா உணவகம், ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.  அம்மா உணவகத்தில் மிகவும் குறைவான விலையில் உணவருந்த முடியும்.

காலையில் இந்திய பெறுமதியில் ஒரு ரூபாய்க்கு இட்லி, மதியம் 5 ரூபாய்க்கு தயிர் சாதம், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம் ஆகியவற்றை சாப்பிட முடியும். அதேபோல் மாலையில் 1.50 பைசாவுக்கு சப்பாத்தியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஆட்சிமாறி திமுக ஆட்சி வந்த போதும் இந்த திட்டத்தை நிறுத்தவில்லை. அதேபோல் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வரும் நிலையிலும் இந்த திட்டம் நிறுத்தப்படவில்லை.

 தவெக ஆட்சியில் அம்மா உணவகம் மேலும் மெருகூட்டப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் ஜெயலலிதாவின் ஆதரவாளர் ஒருவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் Amma Kitchen என்கிற பெயரில் ஒரு உணவகத்தை தொடங்கியிருக்கிறார்.

ஹோட்டலின் முன்பும், உள்ளேயும் பல இடங்களில் ஜெயலலிதாவின் புகைப்படம் வைக்கப்பட்டிருக்கிறது. குறைந்த விலையில் மக்களுக்கு உணவு வழங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் இந்த உணவகத்தில் பரோட்டா, முட்டை, கறி போன்ற தென்னிந்திய உணவுகள் கிடைக்கிறது.

அங்கு சென்று உணவருந்திய ஒருவர் சமீபத்தில் தன் அனுபவத்தை வீடியோவாகவும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.

Leave a comment

Comment