TamilsGuide

கனடா ஆயிரக்கணக்கான வாகனங்கள் மீளப்பெறல்

கனடா மற்றும் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான கிய டெலிரைட் எஸ்.யு.வீ Kia Telluride SUV வாகனங்களை மீளப்பெறும் நடவடிக்கையை Kia நிறுவனம் அறிவித்துள்ளது.

இருக்கை இயக்கும் மின்மோட்டார்கள் தீப்பற்றும் அபாயம் காரணமாக, வாகனம் நிறுத்தப்பட்டிருந்தாலும், இயந்திரம் அணைக்கப்பட்ட நிலையிலும், பாதிக்கப்பட்ட வாகனங்களில் உள்ள இருக்கை மின்மோட்டார்கள் அதிக வெப்பமடைந்து தீ ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள Kia Telluride 2020 முதல் 2024 வரையிலான மாடல் வாகன உரிமையாளர்கள், பழுது நீக்கம் செய்யப்படும் வரை தங்களது வாகனங்களை கட்டிடங்கள் மற்றும் பிற அமைப்புகளிலிருந்து தொலைவில் வெளிப்புற இடங்களில் நிறுத்துமாறு கியா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் தபால் மூலம் அறிவிப்பு அனுப்பப்படும். அவர்கள் கியா விற்பனை நிலையத்துக்கு சென்று தேவையான பழுதுபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இருக்கை சுவிட்ச் சேதமடைந்தாலோ, அதன் உள் அமைப்பு தவறான நிலையில் சென்றாலோ, இருக்கை மோட்டார் தொடர்ந்து இயங்குவதால் அதிக வெப்பம் ஏற்படலாம்.

இதனைத் தடுக்கும் வகையில் Kia விற்பனை நிலையங்களில் மின்னணு ஃபியூஸ் அமைப்பு பொருத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

கனடாவின் போக்குவரத்து அமைச்சு வெளியிட்ட மீளப்பெறல் அறிவிப்பின்படி, கனடாவில் மொத்தம் 20,563 வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 
 

Leave a comment

Comment