TamilsGuide

ஜூலை மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு பயனாளிகளின் கணக்குகளில்

2026 ஜூலை மாதத்திற்கான ‘அஸ்வெசும’ (Aswesuma) நலன்புரிக் கொடுப்பனவுகள் இன்று (15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என்று நலன்புரி நன்மைகள்  சபை அறிவித்துள்ளது.

இதன்படி, சுமார் 11.83 பில்லியன் ரூபா தொகை பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், 1,012,812 பயனாளி குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் 9.35 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்படும்.

இரண்டாம் கட்டத்தில், மேலும் 211,647 பயனாளி குடும்பங்களின் ‘அஸ்வெசும’ கணக்குகளில் 2.46 பில்லியன் ரூபா வரவு வைக்கப்படும் என்று சபை தெரிவித்துள்ளது.

மொத்தத்தில், ‘அஸ்வெசும’ நலத்திட்டத்தின் இரு கட்டங்களின் கீழ் 1,224,459 பயனாளி குடும்பங்கள் 11,825,596,250 ரூபா மதிப்பிலான கொடுப்பனவுகளை இன்று பெற்றுக்கொள்வார்கள் என்று சபை கூறியுள்ளது.

Leave a comment

Comment