TamilsGuide

வானுர்தி பயணப்பாதையை மாற்றியமைத்த விமானி! I m bored கவனம் ஈர்த்த வாசகம் 

லிவர்பூல் நகருக்கு அருகில் பறந்த விமானி ஒருவர், தனது வானுர்தி பயணப்பாதையை மாற்றியமைத்து வானில் 'I'm bored' என்ற வாசகத்தை உருவாக்கியுள்ளார். இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துத் தொடர்புடைய வானுர்திப் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வானுர்திப் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் பயணத்தின் போது இத்தகைய செயல்களில் ஈடுபடுவது குறித்த பல்வேறு தரப்பு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விமானி தனது பயணப்பாதையை வேண்டுமென்றே மாற்றியமைத்ததற்கான காரணம் மற்றும் அவரது பாதுகாப்பு விதிகள் மீறல் குறித்து விரிவான ஆய்வுகளை காவல்துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் மேற்கொண்டு வருவதாகத் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 

Leave a comment

Comment