TamilsGuide

சட்டவிரோத 5,386 சாம்பூ பக்கெட்டுகள் மீட்பு

தலைமன்னார், ஊருமலை கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் நேற்று (13) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சாம்பூ பக்கெட்டுகள் அடங்கிய தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படைக் கப்பலான தம்மென்னா நிறுவனத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, தலைமன்னார், ஊருமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அவ் கடற்கரைப் பகுதியில் ஒதுங்கியிருந்த, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்றதாக சந்தேகிக்கப்படும் சுமார் 5,386 சாம்பூ பக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நடவடிக்கையின் போது கடற்படையினரால் கண்டறியப்பட்ட சாம்பூ பக்கெட்டுகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment