TamilsGuide

எம்பிலிபிட்டியவில் பெற்றோரை கொன்ற மகன் கைது

எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த தம்பதியினர் நேற்று இரவு (13) தங்கள் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கிரலவெல்கெட்டுவவைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணும் அவரது 58 வயதுடைய கணவரும் ஆவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்டகாலமாக இருந்து வந்த தனிப்பட்ட தகராறு முற்றியதன் விளைவாகவே, 26 வயதுடைய மகன் தனது பெற்றோர் இருவரையும் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment