TamilsGuide

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் நீதியின் ஓலம் 2 எனும் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழினப் படு*கொ*லைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கடந்த ஆண்டு நீதியின் ஓலம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தொடங்கி 17ஆம் திகதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் “நீதியின் ஓலம் 2” எனும் போராட்டத்தின் வாயிலாக, தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும்.

இறுதி நாளான 17ஆம் திகதி மாபெரும் பேரணியும் நடைபெறவுள்ளது.

ஆரம்ப நாளான 14ஆம் திகதி மாலை 4 மணிக்கு செம்மணியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு , தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நடைபெற்று, இறுதி நாளான 17ஆம் திகதி தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மக்கள் திரண்டு வருகை தந்து மாபெரும் பேரணி யாழ் நகரில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தப் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என தாயக செயலணியினர் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment