TamilsGuide

என்றும் இளமையாக வாழ கோடிகள் செலவிட்ட தொழிலதிபர் - இறுதியில் ஏற்பட்ட அதிர்ச்சி!

என்றும் இளமையாக வாழ வேண்டும் என்ற கனவுடன், மாதந்தோறும் ரூ.1 கோடிக்கும் மேல் செலவழித்து வந்த பிரபல தொழிலதிபர் பிரையன் ஜான்சனுக்கு, தற்போது எதிர்பாராத உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

நீண்ட ஆயுளுக்காக மேற்கொண்ட முயற்சிகளுக்கு மத்தியில், அவரது உடலே அவருக்கு சவாலாக மாறியிருப்பது மருமத்துவ துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்றும் இளமை கொள்கை

அமெரிக்க தொழிலதிபர் பிரையன் ஜான்சன் (48), நீண்ட ஆயுளும் என்றும் இளமையும் பெறும் நோக்கில் மாதந்தோறும் சுமார் ரூ.1.3 கோடி வரை செலவிட்டு, கடுமையான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தூக்க ஒழுங்கு மற்றும் பல்வேறு சப்ளிமெண்ட்களைப் பின்பற்றி வந்தார்.

தனது உடல்நிலையை மருத்துவக் குழுவின் உதவியுடன் தொடர்ந்து கண்காணித்த அவர், ஒருகட்டத்தில் மகனின் ரத்த பிளாஸ்மா சிகிச்சையையும் மேற்கொண்டார். அதுவும் அவரின் மகனின் பிளாஸ்மாவையே பயன்படுத்தினார்.ஆனால், பலன்கள் இல்லாததால் அதை நிறுத்திக்கொண்டார்.

இந்நிலையில், அவருக்கு ஆட்டோ இம்யூன் இரைப்பை அழற்சி (Autoimmune Gastritis - AIG) என்ற நாள்பட்ட நோய் இருப்பது பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நோயில், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வயிற்றின் ஆரோக்கியமான செல்களையே தாக்குவதால், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி12 உறிஞ்சுதல் பாதிக்கப்படுவதுடன், ரத்த சோகை மற்றும் எதிர்காலத்தில் வயிற்றுப் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கலாம்.

கடந்த 11 ஆண்டுகளாக அவருக்கு இரும்புச் சத்து குறைவாக இருந்தபோதும், சமீபத்திய எண்டோஸ்கோபி மற்றும் பயாப்ஸி பரிசோதனைகளில்தான் இந்த நோய் கண்டறியப்பட்டது.

இருப்பினும், இந்த நோய்க்கு தீர்வு காணும் முயற்சியை கைவிடாமல், தனது மருத்துவக் குழுவுடன் இணைந்து மரபணு ஆய்வுகள் உள்ளிட்ட புதிய ஆராய்ச்சிகள் மூலம் இதை வெல்லப் போவதாக பிரையன் ஜான்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இதுவரை யாரும் இதற்குத் தீர்வை காண முயலவில்லை என்பதால் மட்டுமே இது குணப்படுத்த முடியாத நோய் அல்ல” என்று சவால் விட்டுள்ளார். 
 

Leave a comment

Comment