TamilsGuide

இந்த வேகத்தையெல்லாம் ஆடிமாசம் பூரா எப்படிப் பொறுத்துக்கிட்டீங்க?

1974  மே மாதம் 10-ம் தேதி சென்னை வந்திருந்த போதுதான் முதல் முறையாக எம்ஜிஆரை சந்தித்தேன். தலையில் குல்லாயுடனும் ஜிப்பாவுடனும் அரசியல் தலைவராக அவர் காட்சியளித்தபோது, அவரிடம் ஒரு தனி மரியாதை ஏற்பட்டது."

"மீண்டும் 26-ம் தேதி இங்கு வந்தபோது தான் . 27-ம் தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகியது.

 மேக்-அப் அறைக்கு வந்தார். மேக்-அப்புடன் இளையவராக -இனிய மனிதராகத் தோன்றினார். ரொம்பவும் 'ப்ரீ'யாக இருந்தார். புகழின் உச்சியிலிருந்தாலும் மிகவும் எளியவராகத் காட்சியளித்த அவர், வசனம் பேசுவது. நடிப்பது பற்றி விவரமாகக் கூறி எனக்குத் தெம்பூட்டினார். அவருடன் சேர்ந்து நடிப்பது ரொம்பவும் சுவாரஸ்யமாக இருக்கிறது."

" நானும் எம். ஜி. ஆர் அவர்களும் நடித்த முதல் இரவு காட்சி முதலில் படமாக்கப்பட்டது. 

"அடேயப்பா அவசரத்தைப்பாரு! ஆமாம், இந்த வேகத்தையெல்லாம் ஆடிமாசம் பூரா எப்படிப் பொறுத்துக்கிட்டீங்க?" இது தான் என் முதல் டைலாக்.

- நடிகை ராதா சலூஜா 
(இதயக்கனி படப்பிடிப்பு பற்றி 1974ல்)

Leave a comment

Comment