1978 ஆம் ஆண்டு காரைக்குடி நாராயண் அவர்கள் இயக்கத்தில் வெளியான அச்சாணி திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடல் "மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்" காவிய கவிஞர் வாலியின் வரிகளில் இசைஞானி இளையராஜாவின் இசையில் ஜானகி அவர்களின் குரலில் அருமையான டியூன் சிறப்பான பாடல் வரிகள் அமைந்ததால் இளையராஜா தன் பங்கிற்கு இசையின் மூலம் உயிர் கூட்டியிருந்தார் பாடல் உருவானபோது பல தடங்கல்கள் ஏற்பட்டது பிரசாந்த் ஸ்டூடியோ பிஸியாக இருந்ததால் இளையராஜாவால் காலையில் இந்த பாடலை ஒளிப்பதிவு செய்ய முடியவில்லை எனவே வேறு ஒரு ஸ்டூடியோவுக்கு சென்றனர் ஆனால் அங்கு சில கருவிகள் வேலை செய்யவில்லை எனவே மதியம் மீண்டும் பிரசாத் ஸ்டுடியோ வந்து பாடலை ஒளிப்பதிவு செய்தனர்
படத்தின் சூழல்; கதாநாயகி லஷ்மி தான் பெற்றெடுக்காத தாயற்ற ஒரு குழந்தையை தன் குழந்தை போல வளர்க்கும் சூழல் ஏற்படும் அந்த சூழ்நிலையில் திக்கற்ற அந்த குழந்தைக்கு தாயாக இருந்து வழிநடத்த வேண்டும் என்று "வேளாங்கண்ணி மாதாவிடம் உருகி பிரார்த்தனை செய்வதாக இப்பாடல் காட்சி அமைக்கப்பட்டது வாலி ஐயாவின் வரிகள் "பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது" இந்த வரிகளை பாடாமல் நிறுத்தி விட்டார் ஜானகி எல்லோரும் ஜானகியை பார்த்தபோது அவர் தொடர்ந்து பாட முடியாமல் அழுது கொண்டிருந்தார் ஜானகிடம் என்ன ஆச்சு என இளையராஜா கேட்க இந்த இசையும் வரிகளும் எனக்கு ஏதோ செய்கிறது என சொல்லி இருக்கிறார் பிறகு சிறிது நேரம் கழித்து ஜானகியை ஆசுவாசப்படுத்தி பாடலை ஒளிப்பதிவு செய்து முடித்துள்ளனர்.
Meena Gandhi


