TamilsGuide

பல மேனேஜர்கள் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள்.. நடிகை சுவாசிகா ஓபன் டாக் 

லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சுவாசிகா. இதன்பின் மாமன், கருப்பு, நூறு சாமி ஆகிய திரைப்படங்களில் நடித்து இன்று தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை சுவாசிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த பேட்டியில் அவர் கூறியதாவது, "அங்கே போகலாம், இங்கே போகலாம் என பல மேனேஜர்கள் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் சில இயக்குநர்களின் பெயர் மட்டும்தான் கிடைக்கும். ஒரு லட்சம் ரூபாய் கொடுங்கள் என சொல்வார்கள். அம்மா உடனே அனைத்து நகைகளையும் கழற்றி தந்துவிடுவார். பலமுறை அப்படி நடந்துள்ளது. அவர்கள் அழைத்து செல்லும் இடங்களை பார்த்தால் அவ்வளவு பயமாக இருக்கும்.

அப்போதுதான் அம்மா என்னிடம் சொன்னார், இனிமேல் சினிமா வேண்டாம் என்று. பிறகு மலையாளத்துக்கே சென்று முயற்சி செய்தேன். எப்போதும் என் மீது நம்பிக்கை இருந்தது. மிளகாய் ஸ்பிரே இல்லாமல் நான் எங்கும் போனதில்லை. ஒருநாள்கூட சினிமாவிலிருந்து பின்வாங்க நினைத்ததே இல்லை" என கூறியுள்ளார். 
 

Leave a comment

Comment