TamilsGuide

தன்னை குறிவைத்தால் வரலாறு காணாத பதிலடி - ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஈரான் தன்னைப் படுகொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டால், அதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்கூட்டியே அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்த அவர், ஈரானில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தன்னை இலக்காகக் கொண்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தையும் குறிப்பிட்டார்.

"நான் நீண்ட காலமாக அவர்களின் இலக்குப் பட்டியலில் இருக்கிறேன். இது புதிய சூழ்நிலை அல்ல. எனக்கு ஏதேனும் நேர்ந்தால், அவர்கள் இதற்கு முன் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையான தாக்குதலை மேற்கொள்ளுமாறு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்," என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், "தெஹ்ரான் பல ஆண்டுகளாக என்னை இலக்காகக் கொண்டுள்ளது.

நீங்கள் என்னை மிஸ் செய்வீர்கள் என்று நம்புகிறேன்," என்றும் அவர் தனது கருத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment