• Welcome to TamilsGuide
செய்திகள் 1

படங்களில் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பேசி நடித்த தேங்காய் சீனிவாசன்

சினிமா

படங்களில் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பேசி நடித்த தேங்காய் சீனிவாசன், அவரோடு அரசியலில் சேர்ந்தாரா? அவருக்கு எம்.ஜி.ஆர் உதவிகள் செய்தாரா? "

" வாத்தியாரே, அண்ணன், துரை, சாமி என்று எம்.ஜி.ஆரை தேங்காய் சீனிவாசன் விளிக்கும் போது வெறித்தனமான ரசிகனின் குரல் அதில் புலப்படும். திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் எம்.ஜி.ஆரை நேசித்தவர் அவர். கட்சி ஆரம்பித்தபோது அதில் இணைந்தார். பிரசாரத்திலும் பங்கேற்றார்.

அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் எம்.ஜி.ஆர் சென்றிருந்தார். அதற்குப் பக்கத்து தளத்தில் தேங்காய் சீனிவாசன் நடித்துக்கொண்டு இருப்பதாகத் தகவல் சொல்லப்பட்டது. உடனேயே செட்டுக்கு போய் அவரைப் பார்த்து பேசிவிட்டு வந்தார் எம்.ஜி.ஆர்.

தனது இறுதிக்காலத்தில் மோகனை கதாநாயகனாக வைத்து 'கிருஷ்ணன் வந்தான்’ என்ற படத்தை தேங்காய் சீனிவாசன் எடுத்தார். நிதி நெருக்கடியால் அந்தப் படம் நின்றது. இந்தத் தகவல் எம்.ஜி.ஆருக்கு கிடைத்ததும் அவரை வரவைத்து பணம் கொடுத்து அனுப்பினார்.

தேங்காய் சீனிவாசன் இறந்தபோது எம்.ஜி.ஆரே உடல்நலம் பாதிக்கப் பட்டுத்தான் இருந்தார். அவர் வருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்லும்போது அவரது மகளையும் ஏற்றிக்கொண்டு சென்றார் எம்.ஜி.ஆர். சிறிது நேரத்தில் கார் நின்றது. சீனிவாசன் மகள் மட்டும் இறங்கினார். அவரிடம் எம்.ஜி.ஆர். பணம் கொடுத்து அனுப்பினார்.

தேங்காய் சீனிவாசன் கலந்து கொண்ட கடைசி கூட்டம் மும்பையில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா. அந்த அளவுக்கு இருவரும் இணைபிரியாதவர்களாக வாழ்ந்தார்கள் ! "

- Vikatan Emagazine 

Leave a Reply