• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீயெல்லாம் ஹீரோ.. உனக்கெல்லாம் நான் மியூசிக் போடணுமா?? ஏளனமாக நினைத்த இளையராஜா!!

சினிமா

ஒரு கை ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த 7 நாட்கள், தூரல் நின்னு போச்சு, பொய் சாட்சி, டார்லிங், டார்லிங், டார்லிங், சொக்கத்தங்கம், என பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இளையராஜா – பாக்யராஜ் இடையே மோதல்கள் இருந்தாலும், இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருந்த நிலையில், உதவி இயக்குனராக இருந்தபோதும், ஹீரோ ஆனபோதும் பாக்யராஜூவுடன் எப்படி நடந்துகொண்டேன் என்பது குறித்து இளையராஜாவே ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். 

ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை வெளியுலகத்திற்கு அழைத்து சென்ற பாரதிராஜா இயக்குனராக அறிமுகமான 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குனராக அறிமுகமாகி ஒரு காட்சியில் நடித்திருந்தவர் பாக்யராஜ். 1977-ம் ஆண்டு வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக மாறியது. அதனைத் தொடர்ந்து புதிய வார்ப்புகள் (1979) படத்தில் முதலில் நாயகனாக அறிமுகமான பாக்யராஜ் சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 

தொடர்ந்து ஒரு கை ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த 7 நாட்கள், தூரல் நின்னு போச்சு, பொய் சாட்சி, டார்லிங், டார்லிங், டார்லிங், சொக்கத்தங்கம், என பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக பெண் ரசிகைகளை கவரும் வகையில் இவரின் திரைக்கதை அமைந்திருக்கும். அதேபோல் ஒரு கை ஓசை திரைப்படத்தில் சாதிய பிரிவினைகள் குறித்து பேசியிருப்பார்.  பல வெற்றிப்படங்களை கொடுத்த பாக்யராஜ் சமீபத்தில் மர*ணமடைந்தார். 

பாக்யராஜ் உதவி இயக்குனராக இருந்தபோதே இளையராஜாவுக்கு நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்துள்ளார். பாரதிராஜா புதிய வார்ப்புகள் படத்திற்கு ஹீரோ தேடிக்கொண்டிருந்தபோது யாரும் கிடைக்கவில்லை. ஆனால் பாக்யராஜ் அந்த வாத்தியார் கேரக்டருக்கு சிறப்பாக இருப்பார் என்று தோன்றியதால், அவரையே நாயகனாக மாற்றியுள்ளார். இது குறித்து பாரதிராஜா இளையராஜாவிடம் வந்து சொல்ல, அவரோ ஏளனமாக என்ன பாக்யராஜ் இப்படி பண்ணிட்டீங்க நான் எப்படி இசை அமைக்க முடியும் என்று கேட்டுள்ளார். 

அதன்பிறகு பாக்யராஜ், நான் என்ன சார் பண்றது அவர், சொல்லிவிட்டார் என்று பாரதிராஜாவை கூறியுள்ளார். அதன்பிறகு படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், அடுத்த படமாக நிறம் மாறாத பூக்கள் படத்திற்கான கதையை இளையராஜாவிடம் சொல்ல பாக்யராஜ் வந்துள்ளார். அப்போதுஅவர் கதை சொன்ன விதத்தை கேட்ட இளையராஜா இவரை இப்படி ஏளனமாக நினைத்துவிட்டோமே என்று யோசித்துள்ளார். அதேபோல் புதிய வார்ப்புகள் படத்தில் பாக்யராஜ் கேரக்டருக்கு குரல் கொடுத்தவர் கங்கை அமரன் தான் என்பது கூட தனக்கு தெரியாது என்று இளையராஜா கூறியுள்ளார். 

Kowsalya Tamizhachi


 

Leave a Reply