• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் வந்து கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியவர்கள் 

சினிமா

ஒரு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் வந்து கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி விடுவார்கள் அப்படிப்பட்ட நடிகரகளை இந்த பதிவில் பார்க்கலாம்

1 அன்னாநகர் முதல் தெரு படத்தில் சத்யராஜ் ராதா அம்பிகா ஜனகராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர் ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் நடிகர் பிரபு அம்பிகாவின் கனவராக வந்து கிளைமாக்ஸ் காட்சியை முடித்து வைப்பார்

2 கரிமேடு கருவாயன் படத்தில் விஜயகாந்த் நளினி, ராதாரவி, செந்தாமரை, நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர் கரிமேடு கருவாயனை யாரும் பிடிக்க முடாயாத போது சத்யராஜ் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் போலீஸ் அதிகாரியாக வந்து விஜயகாந்தை சுட்டு பிடிப்பார்

3 சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்திருந்தார் ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் வருவார்

4 பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யா ஹீரோ ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் ஜீவா சிறப்பு தோற்றத்தில் வருவார்

5 தில்லுமுல்லு படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்தார் ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் கமல்ஹாசன் வக்கீல் வேடத்தில் நடித்தார்

6 கமல்ஹாசன் நடித்த 2023 ல் வெளிவந்த விக்ரம் படத்தில் சூர்யா கிளைமாக்ஸ் காட்சியில் ஐந்து நிமிடம் மட்டுமே ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார்.

7 சூர்யா நடித்த கங்குவா படத்தில் கார்த்தி கிளைமாக்ஸ் காட்சியில் சிறப்பு தோற்றத்தில் வருவார்.

Kalimuthu Raj

Leave a Reply