யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பாக, பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி, பல்கலைக்கழகம் முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம் எனும் அமைப்பின் அழைப்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவர் மாணவிகளை துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கினார்கள் எனும் குற்றச்சாட்டில், பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில், காலத்தை இழுத்தடிக்காது விசாரணைகளை துரிதப்படுத்த கோரி, பல்கலைக்கழக முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


