லக்ஷ்மன் யப்பா மீது இலஞ்ச ஊழல் வழக்கு பதிவு
இலங்கை
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மீது, ஊழல் தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இலஞ்ச ஆணைக்குழு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அவர் முதலீட்டு உபயோக அமைச்சராக இருந்தபோது, முதலீட்டுச் சபை பரிவர்த்தனை ஒன்றை எளிதாக்குவதற்காக 2013-ஆம் ஆண்டில் ஒரு தொழிலதிபரிடமிருந்து பத்து லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் இலஞ்சச் சட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















