TamilsGuide

ஈரானுடனான போர் நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டது - பேச்சுவார்த்தை நடத்துவது நேர விரயம் - ட்ரம்ப் 

ஈரானுடனான தற்போதைய போர் நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும், தெஹ்ரானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்றும், அவர்களுடன் இனி பேச்சுவார்த்தை நடத்துவது "நேர விரயம்" என்றும் அவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 ஈரான் மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு ஈரானின் சிரிக், குவாசிம் தீவு, பண்டர் அப்பாஸ், கார்க் தீவு ஆகிய பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் ரேடார் அமைப்பு, ஏவுகணை அமைப்பு, ஆயுத கிடங்குகள் உள்பட 80 இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

ஓமன் வளைகுடா பகுதியில் ஹோர்மூஸ் நீரிணையை கடக்க முயன்ற 3 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து அமெரிக்க துருபுக்கள் தாக்குதல் நடத்தியதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்  நிலையில் ஈரானுடனான தற்போதைய போர் நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  அறிவித்துள்ளமை   குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment