TamilsGuide

உடல் எடையை குறைத்து ஆளே மாறிப்போன நடிகை கிராஸ் ஆண்டனி.. 

மலையாளத்தில் மிகவும் பிரபலமான, வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் கிராஸ் ஆண்டனி. இவர் இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளிவந்த ,பறந்து போ, திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது.

மேலும், விவேகானந்தன் விராலனு, அப்பன், கும்பலங்கி நைட்ஸ் போன்ற மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு அபி டாம் சிரியாக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் எடை குறைந்துள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதுவும் உடல் எடை குறைப்பதற்கு முன் மற்றும் பின் என ஒப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளன.

இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், அவரை பாராட்டி 'இப்படியொரு Transformation-ஆ?' என வியக்கின்றனர். அந்த அளவிற்கு ஆளே மாறியுள்ளார் நடிகை கிராஸ் ஆண்டனி. இதோ நீங்களே பாருங்க:
 

Leave a comment

Comment