• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியோக செயலாளர் சுகீஷ்வர பண்டார ஜூலை 22 வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகீஸ்வர பண்டாராவின் பிணை கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (08) நிராகரித்தது.

அரசு சம்பளங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த தொடர் விசாரணையின் தொடர்பில், சுகீஸ்வர பண்டாரா ஜூன் 18 அன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் (CCIB) கைது செய்யப்பட்டார்.

அவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு அரசு நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
 

Leave a Reply