• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இனி இந்த அரங்கில் யார் எது கேட்டாலும் கொடுக்க வேண்டும்... 

சினிமா

தலைவர் வளர்ந்து பெரிய நடிகர் ஆகி நெப்டியூன் என்ற ஸ்டூடியோ அதை விலைக்கு வாங்கி அதற்கு அவர் அம்மா பெயரை வைத்து சத்தியா ஸ்டூடியோ என்று பெயர் வைத்தார்...
அதே அரங்கில் அப்பன் என்பவர் வேலை செய்து கொண்டு இருக்க அவரை தலைவர் அழைத்தார்..
என்ன அப்பன் எப்படி இருக்கீங்க என்றார்.
நலமே ஐயா என்றார்..
உங்களுக்கு பழைய நெப்டியூன் இதே அரங்கில் என்ன சம்பளம் என்று கேட்டார்...
அவர் ஒரு தொகை சொல்ல இனி அடித்த மாதம் முதல் உங்களுக்கு இரடிப்பு சம்பளம்  ஆனால் ஒன்று...
அன்று நான் இதே அரங்கில் 
துணை வேடம் அதுவும் போய் விட கூடாது  என்று 
தரையில் அமர்ந்து இருந்த போது....
நீங்கள் ஒரு ஜக்கில்  தண்ணீர் கொண்டு போகுறீர்கள் என்று நினைத்து குடிக்க கேட்டேன்.
ஆனால் நீங்க இது தண்ணீர் இல்லை ஜூஸ் இது எல்லாம் உங்களுக்கு இல்லை 
என்று சொல்லி  போய்ட்டிங்க 
ஐயா எனக்கு உங்களை அப்போ தெரியல நினைவு இல்ல என்றார் அப்பன்..
விடுங்க  இனி இந்த அரங்கில் யார் எது கேட்டாலும் கொடுக்க வேண்டும்... அதுக்கு தான் சம்பள உயர்வு  என்கிறார் 
எம்ஜிஆர் என்னும் மகான்...
 

Leave a Reply