TamilsGuide

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அழைப்பு

நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளையும் நாளை (08) காலை 7.30 மணிக்கு விசேட கூட்டமொன்றிற்காக வருமாறு நீதி அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த நீதியமைச்சர் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார இதனைத் தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையின் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டத்தைக் கூட்ட முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மற்ற சிறைச்சாலைகளில் இதுபோன்ற சிக்கலான சூழ்நிலைகள் ஏற்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷனா நனயக்கார தெரிவித்தார்.
 

Leave a comment

Comment