TamilsGuide

டெங்கு அச்சுறுத்தால் மொறட்டுவை பல்கலைக்கு இரண்டு வாரம் பூட்டு

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காரணமாக, மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் இரண்டு வார காலத்திற்கு மூடப்படும் என்று துணைவேந்தர் அறிவித்தார்.

இதற்கு அமைவாக, பல்கலைக்கழக நிர்வாகம், நேற்று (6) முதல் அமுலுக்கு வரும் வகையில், வளாகத்திற்குள் நடைபெறும் செயல்பாடுகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

பல்கலைக்கழகத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் அத்தேர்வுகளில் கலந்துகொண்டதாகத் தகவல்கள் வெளியானதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல்கலைக்கழக நிர்வாகம் கல்வி நிறுவனத்தை தற்காலிகமாக மூட முடிவு செய்தது.

இருப்பினும், இந்த மூடல் காலத்திலும் விரிவுரைகள் உள்ளிட்ட கல்விசார் செயல்பாடுகள் இணையவழியில் தொடர்ந்து நடைபெறும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கல்விசார் செயல்பாடுகள் ஜூலை 21 அன்று மீண்டும் தொடங்கப்படவுள்ளன.
 

Leave a comment

Comment