நவீனமயமாக்கப்பட்ட நாராஹேன்பிட்டி ரயில் நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு
இலங்கை
Dream Destination வேலைத்திட்டம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், ரயில்வே திணைக்களத்தின் மேற்பார்வையில், Clean Sri Lanka செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இலங்கைஉணவு
களனிவெளி ரயில் பாதையின் கொட்டா வீதி மற்றும் கிருலப்பனை உப ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள நாராஹேன்பிட்டி ரயில் நிலையம், பல வருடங்களாக புனரமைக்கப்படாததன் காரணமாக எவ்வித வசதிகளுமற்ற, பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்டது.
நாரஹேன்பிட்டி பிரதேசத்திற்கு, இந்த ரயில் நிலையத்தின் ஊடாகவே பெருமளவிலான மக்கள் தமது போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.
இந்தத் திட்டத்தின் நவீனமயமாக்கல் பணிகள் 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
இந்தத் திட்டத்திற்காக நிதி 40 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டு;ள்ளது
இந்த நிலையில் Dream Destination திட்டத்தின் கீழ், வசதிகள் மேம்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்ட நாராஹேன்பிட்டி ரயில் நிலையத்தினை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கும் நிகழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
அதன்படி, நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, ஒட்டுமொத்த கட்டமைப்பையும் அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் திட்டமாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது குறிப்பிட்டார்
ரயில் சேவையை விரிவுபடுத்துவதன் கீழ், அடுத்த வருடம் மின்சார ரயில் சேவைக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அதன் கீழ் கொழும்பு – பாணந்துறை, கொழும்பு – மாகும்புர, கொழும்பு – ராகம ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு முதற்கட்ட மின்சார புகையிரத சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்
நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர, கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஹேமந்த வீரகோன், கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் சுனந்த லியனபத்திரன, உட்பட அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.






















