TamilsGuide

மன்னரின் அழைப்பை ஏற்றாலும் ஹரி அரண்மனையில் தங்க முடியாது - தெரிய வந்த காரணம்

இளவரசர் ஹரி பக்கிங்ஹாம் அரண்மனையில் தங்குவதற்கான வாய்ப்பை மன்னர் வழங்கியதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

பிரித்தானிய இளவரசர் ஹரி இந்த வாரம் பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். 

பக்கிங்ஹாம் அரண்மனையில் தங்குவதற்கான வாய்ப்பை, மன்னர் சார்லஸ் ஏற்கனவே வழங்கியிருந்ததை,ஹரி ஏற்றுக்கொண்டதாக அவரது தரப்பினர் கூறியிருந்தனர்.

ஆனால், ஹரி பக்கிங்ஹாம் அரண்மனையில் தங்கமாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

இளவரசர் உரிய நேரத்தில் அதை ஏற்றுக்கொள்வதில் தவறிவிட்டதாகவும், அதனால் அரச மாளிகை நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு போதிய அவகாசம் இல்லாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் ஹரி இருவரும் சந்திப்பார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டாலும், எந்தத் திட்டங்களும் தனிப்பட்டதாகவே இருக்க வாய்ப்புள்ளது என்ற தகவலும் உள்ளது.      
 

Leave a comment

Comment