TamilsGuide

உயிரி ஆயுதம் பயன்படுத்துகிறாரா புடின்? உளவுத்துறையின் செய்தியால் உருவாகியுள்ள அச்சம்

ரஷ்யப் படைவீரர்கள், ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்துள்ள உக்ரைன் பகுதிகளில், ஆந்தராக்ஸ் என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கால்நடைகளின் உடல்களை கொண்டு வீசி வருவதாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை எச்சரித்துள்ளது.

2001ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இரட்டைக் கோபுர தாக்குதல்களைத் தொடர்ந்து, பலருக்கு தபால் மூலம் ஆந்தராக்ஸ் பவுடர் அனுப்பப்பட்டது நினைவிருக்கலாம். 

உயிரி ஆயுதம் பயன்படுத்துகிறாரா புடின்? உளவுத்துறையின் செய்தியால் உருவாகியுள்ள அச்சம் | Ukraine Says Russia Bury Anthrax In Its Territory

அந்த கடிதங்களைக் கையாண்ட 22 பேருக்கு ஆந்தராக்ஸ் தொற்று ஏற்பட்டது, அவர்களில் 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, பல நாடுகளில் மக்கள் தங்கள் எதிராளிகளை பயமுறுத்த, தபாலில் ஆந்தராக்ஸ் பவுடர் அனுப்பிவிடுவேன் என மிரட்டிய சம்பவங்களும் நடந்தன.

அதாவது, இந்த ஆந்தராக்ஸ் என்பது, பேசில்லஸ் ஆந்த்ராஸிஸ் என்னும் நோய்க்கிருமியால் பரவும் ஒரு நோய்த்தொற்று ஆகும். 

அந்த ஆந்தராக்ஸ் கிருமி, சாதகமற்ற சூழல்களிலும், தான் தப்பிப் பிழைத்து வாழ்வதற்காக, தன்னை ஒரு முட்டைபோல் மாற்றிக்கொள்ளும். அந்த முட்டை போன்ற விடயம் ஸ்போர் என அழைக்கப்படுகிறது.

சாதகமற்ற சூழல்களில் தன்னை ஸ்போராக மாற்றிக்கொள்ளும் இந்த ஆந்தராக்ஸ் கிருமி, சாதகமான சுழலில் மீண்டும் உயிர் பெறும். அந்த ஸ்போர்களைத்தான் ஆந்தராக்ஸ் பவுடர் என்கிறார்கள்!

விடயம் என்னவென்றால், அதே ஆந்தராக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை, ரஷ்ய ஆக்கிரமிப்பு உக்ரைன் பகுதிகளில் கொண்டு வீசி வருகிறார்களாம் ரஷ்யப் படைவீரர்கள். 

அதுவும், மக்கள் வசிக்கும் வீடுகள், பண்ணைகள், ஆறுகள் மற்றும் கிணறுகள் அமைந்துள்ள இடங்களுக்கு அருகில் நோய் பாதித்த கால்நடைகளைக் கொண்டு வீசி வருகிறார்களாம் ரஷ்யப் படைவீரர்கள்.

இந்த ஆந்தராக்ஸ் கிருமிகள் இப்போதைக்கு நோயை ஏற்படுத்துவது மட்டுமின்றி, அவை ஆறுகள் போன்ற நீர் நிலைகளை அடையுமானால், இரண்டு ஆண்டுகள் வரை அவற்றால் தாக்குப் பிடிக்க முடியும், ஆகவே, பெரும் ஒரு கொள்ளை நோய் பரவலை அவை உருவாக்கும் அபாயம் உள்ளது. 

அதுமட்டுமின்றி, இந்த ஆந்தராக்ஸ் கிருமியின் ஸ்போர்கள் பல ஆண்டுகளுக்கு மண்ணில் மறைந்து கிடக்கும். அவை தண்ணீரில் கலந்து உயிர் பெறும்போது பயங்கர நோய்த்தொற்றை உருவாக்கும்.

ஆகவே, அவற்றை மண்ணில் மறைந்துகிடக்கும் கண்ணிவெடிகளுக்கு ஒப்பிடலாம். ஆக, ரஷ்யப் படை வீரர்கள் ஆந்தராக்ஸ் தொற்றால் உயிரிழந்த கால்நடைகளை ரஷ்ய ஆக்கிரமிப்பு உக்ரைன் பகுதிகளில் வீசுவதன் மூலம், புடின் இந்த ஆந்தராக்ஸ் கிருமிகளை உயிரி ஆயுதமாக பயன்படுத்துகிறாரா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

ஆந்தராக்ஸ் கிருமியால் பாதிக்கப்படுவோர், ப்ளூ போன்ற அறிகுறிகளுடன் துவங்கி, இரத்த வாந்தி எடுத்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பல உள்ளுறுப்புகள் செயலிழந்து, செப்டிக் ஷாக் என்னும் நிலையை எட்டி, மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment