TamilsGuide

அலி கமேனிக்கு அஞ்சலி செலுத்த 4000 கிமீ பயணம் செய்து வந்த பெண்

இங்கிலாந்தில் வசித்து வரும் ஈரானை சேர்ந்த மஜியா என்ற ஈரானியப் பெண், தனது தாயகத்தின் மீது கொண்டுள்ள பற்று மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக 4,000 கிலோமீட்டர் தூரம் பயணித்து, மறைந்த முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கத் தெஹ்ரான் வந்துள்ளார்.

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தலைநகர் தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லா நோக்கி லட்சக்கணக்கான மக்கள் ஈரானிய கொடிகளுடன் சோகமாக திரண்டு வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற இஸ்ரேல்-அமெரிக்க வான்வழி தாக்குதலில் அலி கமேனி கொல்லப்பட்டார். அவரது உடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரான் நகரம் முழுவதும் கறுப்பு பேனர்களும் மதச் சின்னங்களும் நிறைந்துள்ளன. அதே நேரத்தில், மினாப் பகுதியில் உள்ள பெண்கள் பள்ளி மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பலியான 150-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களும் தெஹ்ரானில் வைக்கப்பட்டுள்ளன.

இது போரின் வடுக்களை மக்களுக்கு நினைவூட்டுகிறது. க மேனியின் இறுதி ஊர்வலம் இன்று கியோம் நகருக்கும், பின்னர் ஈராக்கின் புனித நகரங்களான நஜாஃப் மற்றும் கர்பலாவுக்கும் சென்று, இறுதியாக ஜூலை 9 அன்று மஷ்ஹாத் நகரில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

பிப்ரவரி 28 அன்று நடந்த அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் நாடு முழுவதும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
 

Leave a comment

Comment