• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரான் – கட்டார் இடையிலான கடல்வழி வர்த்தகம் மீண்டும் ஆரம்பம்

சுமார் ஐந்து மாத கால இடைநிறுத்தத்திற்குப் பின்னர், ஈரானுக்கும் கட்டாருக்கும் இடையிலான கடல்வழி வர்த்தகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டோஹாவிற்கான ஈரானின் வர்த்தகப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான கடல் வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளமை, இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இந்த வர்த்தக நடவடிக்கைகள் மீளத் தொடங்கப்பட்டதன் மூலம் பொருட்களின் போக்குவரத்து சீரடைந்து, இரு நாடுகளுக்குமிடையிலான வணிக உறவுகள் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இதுகுறித்த மேலதிக விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply