அக்குரெகொட இரட்டை கொலையுடன் தொடர்புடைய மாலைதீவில் கைதானவர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார்
இலங்கை
அக்குரெகொட பகுதியில் அண்மையில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கொலைக்கு உதவிய சந்தேகநபர் ஒருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டு நேற்று (04) இரவு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அக்குரெகொட பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் இந்த சந்தேகநபர் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் மாலைதீவில் கைதானமை குறிப்பிடத்தக்கது.





















