• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாங்கள் ஈரானை கடுமையாக தாக்கினோம் - அயதுல்லா கமேனி இறுதிச் சடங்கு நிகழ்வு தொடங்கிய நிலையில் டிரம்ப் பேச்சு..!.

வெனிசுலாவை நாங்கள் ஒரே நாளில் வீழ்த்தினோம், ஈரானை நாங்கள் கடுமையாக தாக்கினோம் என அயதுல்லா அலி கமேனி இறுதிச் சடங்கு தொடங்கிய நிலையில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அணுசக்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்ததால், அணுஆயுதம் தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டால் இது அந்த பிராந்தியம் மற்றும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என அமெரிக்காவும், ஈரானும் கருதின. இதனால் இரண்டு நாடுகளும் ஒன்றாக இணைந்து கடந்த பிப்ரவரி 18-ந்தேதி ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. முதல் நாள் தாக்குதலிலேயே அந்நாட்டின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவருடன் அவருடைய குடும்பத்தினர் பலரும் கொல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மேற்காசிய (வளைகுடா) பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவியது. ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த 4 மாதங்களாக போர் பதற்றம் நிலவி வந்து நிலையில், நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் 60 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

போர் பதற்றம் காரணமாக அயதுல்லா அலி கமேனி இறுதிச் சடங்கு நடைபெறாமல் இருந்தது. தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்த ஈரான், அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சட்டங்கை நடத்த முன்வந்துள்ளது.

6 நாட்கள் நடைபெறும் அயதுல்லா அலி கமெனியின் இறுதிச் சடங்கு நிகழ்வு நேற்று தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் மற்றும் தலைவர்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல இடங்களில் இந்த நிகழ்வு நடைபெற இருக்கின்றன.

வெனிசுலாவை நாங்கள் ஒரே நாளில் வீழ்த்தினோம், ஈரானை நாங்கள் கடுமையாக தாக்கினோம். அவர்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எப்படியாவது சமரசம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். நாங்கள் நல்லவர்கள் என்பதால், இறுதிச் சடங்கிற்கு நாங்கள் ஒரு வாரம் கொடுத்துள்ளோம்.

ஈரான் நாட்டின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி 36 ஆண்டுகள் இருந்தார். பிப்ரவரி மாதம் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருடன் அவருடைய குடும்பத்தினர் கொல்லப்பட்ட நிலையில், மகன் மட்டும் படுகாயத்துடன் உயிர் பிழைத்தார். ஆனால், இதுவரை அவர் பொது இடத்தில் காணப்படவில்லை. அயதுல்லா அலி கமேனி இறுதிச் சடங்கில் அவர் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply