• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்கள் திலகம் எம்ஜியார் இரு மாறுபட்ட வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் நாளை நமதே

சினிமா

மக்கள் திலகம்,புரட்சித் தலைவர் எம்ஜியார்  இரு மாறுபட்ட வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம்  "நாளை நமதே "  இந்த மாபெரும் வெற்றி த்திரைப்படம் வெளியான தினம் இன்று.

இந்த படம் இந்தி படத்தின் தழுவலாக இருந்தாலும் கூட புரட்சித் தலைவரின் கொள்கைக்கும், ஸ்டைலுக்கும் ஏற்றாற்போல மெருகேற்றி எடுக்கப்பட்டிருக்கும். அதிலும் "சங்கர்" எனும் கதாபாத்திரத்தில் வரும் மக்கள் திலகத்தின் முகத்தோற்றமானது  கருப்பாக விகாரம் கலந்த எழில் தோற்றமாக சற்று வித்யாசமாக இருக்கும்,இவர்  அசாதாரணமாக பேசும்  " என் வழியே தனி வழி "  என்ற பஞ்ச் டயலாக்கைத்தான் படையப்பா படத்தில் ரஜினி மெனக்கெட்டு ஸ்கிரிப்டாக பயன்படுத்தினார். இன்னொருவர் விஜய் அழகான கொழு கொழு சிவப்பான  இளமை சதைப்பற்றான தேகம் , படத்தில் நாயகிகள் லதா மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா என கலக்கல் இடையே எம்.என்.நம்பியாரின் வில்லங்கத்தில்  மாடக்குளம் அழகிரிசாமியின் நூதன சண்டைக்காட்சிகள் அருமை.மெல்லிசைமன்னரின் இசையில் வாலியின்  பாடல்கள் ஐந்தும் தேன்.நாளை நமதே புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு எதிர்காலத்தை முன்னுரைத்த ஒரு அருமையான படம். நாளை நமது ஆட்சி என்ற மக்களுக்கு நம்பிக்கை தந்த தலைப்பு. அடுத்த ஆண்டு அநியாய ஆட்சி  "கலைப்பு". அடுத்து அமைந்தது அண்ணலின் ஆட்சி..மாட்சிமை பொருந்திய முதல்வர் பதவியில் நம்  புரட்சி தலைவர்.

அந்த அருமையான தருணத்தை. எதிர்நோக்கிய நம் சிவந்த கண்களுக்கு. அன்றுதான் ஏற்பட்டது குளிர்ச்சி.

"நாளைநமதே" வெளியாகி இன்றுடன் 51 ஆண்டுகள் ஆகின்றன. (4-7-1975)  நாளை நமதே தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடியது .நெல்லை சிவசக்தியில் வெளியாகி தொடர்ந்து 60 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து சாதனை செய்தது. 50 வது நாளில்  சென்ட்ரலில் வெளிவந்த 

"இதயக்கனி" மற்றுமொரு வெற்றி படமானதால் "நாளை நமதே" நூறு நாள் ஓடாது 62 நாட்களுடன் நிறுத்தப்பட்டது. அதாவது 62 நாளில் ₹ 146,000

வசூலாக பெற்றது .இன்னெரு சாதனையாக  "இதயக்கனி" சென்ட்ரலில் 100 நாட்கள் ஓடி மிகப் பெரிய சாதனை செய்தது.

சிவசக்தி தியேட்டர் நெல்லை மாநகரில்  மெயின் ரோட்டில் கிடையாது. மெயின் ரோட்டிலிருந்து சுமார் 1/2 கி.மீ தூரம் வயல் வெளியில் நடந்து செல்ல வேண்டும்.அது  மக்கள் திலகம் எம்ஜிஆர் படத்துக்கு மட்டுமே மக்கள் வருவார்கள் என்ற எண்ணத்தில் படத்தை வெளியிட்டு

அதில் வெற்றியும் பெற்றார்கள்.

நாளை நமதே   (கதைப்படி) தான் திருடிய பணத்தை இல்லாதவர் வீட்டில் இரவு நேரங்களில் கொண்டு போடுவார்(படத்தில் காட்சி அமைப்பு இருக்காது,நாகேஸ் கூறுவார்) இந்த வசனத்தின் கருவை வைத்து-தான் காட்சி அமைப்போடு, கந்தசாமி என்னும் படமே எடுக்கப்பட்டது. இதில் நாகேஸ் அவர்களுக்கு காமெடி காட்சிகள் கிடையாது.அதற்க்கு பதிலாக தலைவரின் பெருமையை பற்றி பல வசனங்கள் பேசுவார்.......

இப்படத்தில் வரும் அரசியல் வசனங்கள் இன்றைக்கும் பெறும் வரவேற்பை பெறுகிறது.மேலும் இதில் இடம்பெறும் பாடல்களில் " நாளை நமதே, இந்த நாளும் நமதே ", " நான் சபை ஏறும் நாள் வந்தது ". இப்பாடல் வரிகளுக்கேற்ப இரண்டாண்டுகளித்து (30.06.1977 ஆட்சி அமைத்த பின்)இதே நாளிள்தான, இவர் முதல் முறையாக தமிழகத்தின் அமைச்சரவை-யை கூட்டினார்....

உலகத்தில் எந்த ஒரு மனிதனுக்கும் இப்பட்ட ஒரு ஒற்றுமை இருந்து கிடையாது.அவர் திரைப்படம் வாயிலாக மக்களுக்கு என்ன சொன்னாரோ,பின் முதல்வராக ஆன பிறகு அதை செய்தும் முடித்துக் காட்டினார்.புரட்சித்தலைவர் அவர்கள் இந்த நாளிலே 4-7-77 லே முதல்வராக  முதல் முறையாக சட்டசபையில் பதவியேற்றார். அதன்  நினைவாகவே  அவருடைய கார் நம்பர் TMX.4777. என்ற எண்ணுடையதை பயன்படுத்தினார்.
 

Leave a Reply