TamilsGuide

ஹோர்மூஸ் நீரிணையில் புதிய கட்டுப்பாடுகள் - ஈரான் கடும் எச்சரிக்கை

ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து வணிக மற்றும் எண்ணெய் கப்பல்களும் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஈரான் கூட்டு இராணுவக் கட்டளைப் பிரிவு திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் அதே வேளையில், ஈரான் இராணுவம் இந்த கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பித்த போர், தற்போது தற்காலிக போர் நிறுத்தத்தின் கீழ் அமுலில் உள்ள நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு எந்தவித பாதுகாப்பு அச்சமுமின்றி சரக்குக் கப்பல்கள் முக்கிய நீர்வழிப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து வந்துள்ளன.

இந்தச் சூழலில், இருதரப்பும் தங்களுக்குள் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறிவிட்டதாகக் கூறி மீண்டும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் மீண்டும் தனது கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அனுமதிக்கப்பட்ட பாதைகளைத் தவிர்த்து மற்ற வழிகளில் செல்லும் கப்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என ஈரான் அறிவித்துள்ளதால், சர்வதேச கடல் வர்த்தகப் பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
 

Leave a comment

Comment