• Welcome to TamilsGuide
செய்திகள் 1

50-வது நாள் வெற்றிக் கொண்டாட்டத்தில் கருப்பு படம்

சினிமா

நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த கருப்பு திரைப்படம் கடந்த மே 15 அன்று வெளியானது. ஆக்க்ஷன் என்டர்டெய்ன்மன்ட் படமாக விளங்கிய இந்த படம், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.175 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. அத்துடன் உலகளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூன் 12 அன்று இப்படம் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது. இருப்பினும் திரையரங்குகளிலும் ரசிகர்களிடம் தொடர் வரவேற்பை பெற்று வருகின்றது.

தற்போது இப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர்களான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளனர். மேலும் இப்படத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் நன்றி!

நம்பிக்கை, உணர்ச்சி மற்றும் மனிதநேயத்தில் வேரூன்றிய ஒரு கதை...

சாய் அபயங்கரின் இசை விருந்தில், நடிகர் சூர்யாவின் மிகப்பெரிய வெற்றிப்படம் இது. திரையரங்குகளில் கருப்புவின் 50 வெற்றிகரமான நாட்களைக் கொண்டாடுகிறோம். இந்த மைல்கல் உங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. எங்களின் அன்பானா ரசிகர்களுக்கும் அனைத்து பார்வையாளர்களுக்கும் மற்றும் உங்களின் அசைக்க முடியாத அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. இவ்வாறு அப்பதிவில் குறிப்பிட்டிருந்தனர்.
 

Leave a Reply