TamilsGuide

டேட்டிங் ஷோவை தொகுத்து வழங்கும் ரம்யாகிருஷ்ணன்

தமிழில் டேட்டிங் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு புதிய கோணத்தை தரும் வகையில், ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘செகண்ட் லவ்'-ஐ அறிவித்துள்ளது. ஜூலை 13-ந்தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். காதலுக்கு இன்னொரு வாய்ப்பு எல்லோருக்கும் உள்ளது என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ஹாட் ஸ்டார் தமிழ், ‘செகண்ட் லவ்' நிகழ்ச்சியின் முதல் புரோமோவை வண்ணமயமான இசை வீடியோவாக வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சி குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் உற்சாகமாக விவரிக்க, ஸ்ருதிகா அர்ஜூன் நிகழ்ச்சியின் கியூபிட்டாக வருகிறார். நம்பிக்கை, காயங்களில் இருந்து மீள்வது மற்றும் மீண்டும் காதலை கண்டடையும் மகிழ்ச்சியை இந்த புரோமோ மூலம் பார்க்கலாம். புரோமோவின் இறுதியில், “காதலுக்கு காரணம் தேவையில்லை. இது காதலின் பிராண்ட் நியூ சீசன்” என இந்த நிகழ்ச்சியின் கேப்ஷனை ரம்யா கிருஷ்ணன் சொல்கிறார்.

‘செகண்ட் லவ்' நிகழ்ச்சியின் மூலம், நம்பிக்கை, மனமாற்றம் மற்றும் காதலை கொண்டாடும் தனித்துவமான ரியாலிட்டி நிகழ்ச்சியை தனது ஒரிஜினல்சில் இணைத்துள்ளது ஜியோ ஹாட் ஸ்டார்.

ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஜூலை 13 முதல் ‘செகண்ட் லவ்’ நிகழ்ச்சி தமிழில் ஸ்ட்ரீமாக இருக்கிறது.
 

Leave a comment

Comment