• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிளாஸ்ட் இயக்குனர் சுபாஷ் கே ராஜ்-சீயான் விக்ரம் இணையும் புதிய படம்

சினிமா

'பிளாஸ்ட்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் சுபாஷ் கே ராஜ் தனது அடுத்த படத்திற்காக நடிகர் சீயான் விக்ரமுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய சுபாஷ் கே ராஜ், அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான 'பிளாஸ்ட்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

பாக்ஸ் ஆபீஸில் சுமார் 75 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்த இத்திரைப்படம், சமீபத்தில் ஓடிடி தளத்திலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

'பிளாஸ்ட்' படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது சீயான் விக்ரம் தான் என்று கூறப்படுகிறது.

தற்போது இந்த வெற்றிக் கூட்டணி தங்களது புதிய படத்திற்கான தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதால், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விக்ரம், ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீயான் 63' திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply