• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Coundown starts.. நோலனின் தி ஒடிஸி இறுதி டிரெய்லர்

சினிமா

ஹாலிவுட் ஜாம்பவான் கிறிஸ்டோபர் நோலனின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'தி ஒடிஸி' திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியிட்ட இந்த 'கவுண்ட்டவுன் டிரெய்லர்', படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை வெகுவாக அதிகரித்துள்ளது.

கிரேக்கப் புராணத்தில், டிரோஜன் போர் முடிவடைந்த பிறகு, இத்தாக்காவின் மன்னரான 'ஒடிஸியஸ்' தனது ராஜ்ஜியத்திற்கு திரும்புவதற்காக மேற்கொள்ளும் அபாயகரமான பயணமே இப்படத்தின் கதையாகும்.

இப்படத்தில் மாட் டேமன் ஒடிஸியஸாகவும், ஆன் ஹேத்வே அவரது மனைவி பெனிலோப்பாகவும் நடிக்கின்றனர்.

இவர்களுடன், டாம் ஹாலண்ட், ராபர்ட் பேட்டின்சன், ஜெண்டாயா மற்றும் சார்லிஸ் தெரான் போன்ற பெரும் நட்சத்திரப் பட்டாளமும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

முற்றிலும் ஐமேக்ஸ் கேமராக்களால் படமாக்கப்பட்ட 'தி ஒடிஸி' இந்த மாதம் 17 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
 

Leave a Reply